ஏரியில் நீராடிய மாணவி உயிரிழப்பு

தம்புத்தேகம, ஓக 29

மெதகம ஏரியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவி ஒருவர்  நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்த நிலையில் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். லிகொலவெவ, மஹகல்கத்வார பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply