
கொழும்பு, ஓக 29
தண்ணீர் கட்டணத்தை செலுத்துவதில் தவறிழைக்கும் அரச நிறுவனங்களிடமிருந்து 2.5% தாமதக் கட்டணமாக அறவிட தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
மூன்று மாதங்களுக்கும் மேலாக நீர் கட்டணத்தை செலுத்தத் தவறும் அரச நிறுவனங்களிடமிருந்து இந்த கட்டணம் அறவிடப்படவுள்ளது. இதற்கு முன்னர் தாமதக் கட்டணம் எதுவும் அறவிடப்படவில்லை என அதன் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத தெரிவித்தார்.
இதேவேளை இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
குடிநீர் கட்டணத்தை செலுத்த தவறியதாக கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பாக்கியை வசூலிப்பது குறித்து பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக பிரதி பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்தார்.



