அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாணவன் சாதனை!

<!–

அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாணவன் சாதனை! – Athavan News

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியை சேர்ந்த லோ.கிசோபன் கணித துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்முதல் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் நான்காம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

கொம்மாதுறையினை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப்பரீட்சையில் கணித பிரிவில் இந்த சாதனையினை படைத்து பொறியியல் துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவரை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம், மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் ஆகியோர் நேரில் சென்று தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


Leave a Reply