இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால் சர்வ தேச நாடுகள் உதவி களைச்செய்யவேண்டும் .
இவ்வாறான நெருக்கடி நேரத்தில் இலங்கைக்கு எதிரான ஏன் மற்றுமொரு பிரேரணையை முன் வைக்கவேண்டும் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சுயாதீன அணியின் நாடாளு மன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ .
பிரேரணைகள் மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதைச் சர்வதேச நாடுகள் கவனத் தில்கொள்ள வேண்டும் . பிரேரணைகள் இன உறவுக்கு மேலும் குந்தகத்தையே ஏற்படுத்தும் .
பொருளாதார நெருக்கடி யிலிருந்து மீண்டெழ வேண்டுமெனில் சர்வதேச நாடுகளின் உதவிகளே வேண்டும் . இந்நிலையில் இலங்கைக்குப் எதிராகப் புதிய பிரேரணை எதற்கு ? ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட எந்தப் பிரேரணையும் செயலுருப் பெற்றதாக வரலாறு இல்லை – என்றார்.



