தனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்று கூறுபவர் அதிமுகவுக்கு எதிராக ஏன் பிரச்னை செய்ய வேண்டும் – இபிஎஸ் கேள்வி.!

தனக்கு எந்த பதவியும் வேண்டாம் எனக் கூறும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு எதிராக ஏன் பிரச்சனை செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க வில் சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் இணைக்க ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அழைப்பு அவரின் தனிப்பட்ட நிலைப்பாடு என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதேவேளை வாக்குறுதி வழங்கியபடி கல்விக் கடன் இரத்து, பெண்களுக்கு மாத உதவித்தொகை போன்ற திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை என சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் 80 கோடியில் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பது அவசியமா என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.

Leave a Reply