இராஜகிரியவில் உள்ள பிரபல உணவு விற்பனை நிலையத்தின் சமையல் அறையில் பூனை மலத்தை கண்ட சுகாதார மருத்துவ அலுவலர்கள் அந்த உணவகம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார மற்றும் வைத்திய அதிகாரி பிரிவினர் மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்த முப்பது கடைகளை சோதனை செய்து எட்டு கடைகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தச் சோதனையின் கீழ், சம்பந்தப்பட்ட 8 கடைகள் உரிமையாளர்களையும் கொழும்பு அளுத்கடை மற்றும் கங்கோடவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளுக்கு 82,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்



