<!–
சவூதி அரேபியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து எழுத்துமூல கடிதமொன்றை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெற்றுக்கொண்டதாக சவூதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஊக்குவிப்பதற்காகவும், அவற்றை அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா சார்பாக பிரதி வெளிவிவகார அமைச்சர் வலீத் பின் அப்துல்கரீம் அல்-குரைஜி இந்த கடிதத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடதக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.




