சம்பிக்க ரணவக்கவிற்கு முக்கிய குழுவின் தலைவர் பதவியினை வழங்குமாறு பரிந்துரை!

<!–

சம்பிக்க ரணவக்கவிற்கு முக்கிய குழுவின் தலைவர் பதவியினை வழங்குமாறு பரிந்துரை! – Athavan News

எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் நாடாளுமன்ற குழுவொன்றை அமைப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இன்றைய தினம்(திங்கட்கிழமை) குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் கோரி வருவதால், தான் முன்மொழிந்த குழுவின் தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக பிரேரணையை முன்வைத்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்ற துறைகளில் அறிவுள்ள ஒருவரை அதன் தலைவராக நியமித்தால் சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply