திருகோணமலை கல்வி வலயத்தில் கிடைக்கப்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் -2021 இல் மாவட்டத்தில் கணித விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை கல்வி வலயம் சாதனை புரிந்து மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதாக திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
பாடசாலைப் பரீட்சார்த்திகளுள் மருத்துவ பீடத்திற்கு -20 மாணவர்களும் பொறியில் பீடத்திற்கு -24 மாணவர்களும் தெரிவாகியுள்ளனர்.
உயர்தரப் பரீட்சையில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும், பாடசாலையின் அதிபர்களுக்கும் வலயக்கல்வி அலுவலக பாட ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பாட உதவிக்கல்விப்பணிப்பாளர்களுக்கும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் மற்றும் ஒத்துழைத்த அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் அறிவித்துள்ளார்.
பிற செய்திகள்



