<!–
நாடாளுமன்ற விவகாரக் குழுவில் நான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, ஐ.தே.க. உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியின் தலதா அத்துகோரள மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இந்த அறிவித்தலை தெரிவித்தார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.




