<!–
வெளிநாட்டில் வேலைக்காகச் செல்ல முயற்சிக்கும் போது, அரச ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய படிவத்தின் பக்கங்களைக் குறைக்க பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பணிப்புரைக்கு அமைய விண்ணப்பப் படிவத்தின் பக்கங்களின் எண்ணிக்கை நான்கில் இருந்து இரண்டு பக்கங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
விண்ணப்பப் படிவங்களை அச்சிடுவதற்கான செலவு அதிகமாக இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையின் மூலம் விண்ணப்பப் படிவத்தை அச்சிடுவதற்கான செலவு 50 சதவீதம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.




