சாடி முறையிலான அன்னாசி பயிற்செய்கை; யாழில் வெற்றி! (படங்கள் இணைப்பு)

சாடி முறையிலான அன்னாசி பயிற்செய்கை யாழ்ப்பாண இந்து கல்லூரியில் வெற்றியளித்துள்ளதாக யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பாட ஆசிரியர் குமாரசாமி கலைதீபன் தெரிவித்தார்.

நகரப்புறங்களில் சாடி முறையிலான அன்னாசி பயிற்செய்கையினை மேற்கொள்ளும் செயற்திட்டம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வளாகத்தில் செயற்படுத்தப்படுகின்றது.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த அன்னாசி பயிற்செய்கையானது மேற்கொள்ளபடுகிறது. 300 அன்னாசி கன்றுகள் நடுகை செய்யப்பட்டு, தற்பொழுது அவை அறுவடைக்கு தயாரான நிலையில் காணப்படுகிறது.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பாட ஆசிரியர் குமாரசாமி கலைதீபன் அவர்களின் நெறிப்படுத்தலில், யாழ்ப்பாண இந்து கல்லூரியில் குறித்த பாடவிதானத்தினை கற்கும் மாணவர்களின் உதவியோடு, நகர்ப்புற சாடி முறையிலான அன்னாசி செய்கை முறை யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் வளாகத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.

நகர்ப் புறங்களிலும் பழ உற்பத்தினை மேற்கொள்ளலாம் என்ற ஒரு உறுதியோடு நகர்ப்புறங்களில் சாடி முறையிலான பயிற்செய்கையினை மேற்கொள்ளலாம் என்ற செயற்திட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.

இவ்வாறான செயற்திட்டங்களின் மூலம் எதிர்காலத்தில் உணவு கிடைக்காமை மற்றும் உணவுக்கு ஏற்படும் தட்டுப்பாட்டினை குறைக்க முடியும்.

அதாவது வீடுகளில் மர நிழல்களின் கீழ் குறித்த பயிற்செய்கையினை இலகுவாக மேற்கொள்ள முடியும் அத்தோடு சாடிகளில் இதனை செயற்படுத்துவதன் காரணமாக நில தட்டுப்பாடான எல்லா இடங்களிலும் இந்த பயிற்செய்களை மேற்கொள்ள முடியும்.

தற்பொழுது அன்னாசி போன்ற பழங்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறான பல பயிர்களை நகரப்பகுதிகளில் பயிற்செய்கையினை மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள் அதிகளவில் இலாபத்தினை இலகுவாக ஈட்டிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

பிற செய்திகள்

Leave a Reply