
கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெதகம ஏரியில் குளித்த பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சிறுமி நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் கிடைத்த செய்திக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த 18 வயதுடைய நபர் மஹகல்கடவர லீகொலவெவ பிரதேசத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்



