கண்டியில் வர்த்தகர் ஒருவரைக் காணவில்லை!

பேராதனை உத்ஹித பூங்காவுக்கு முன்பாக வர்த்தகம் நிலையம் ஒன்றை நடத்திச் சென்ற ஒருவரை இரண்டு நாட்களாக காணவில்லை என காணாமல் போனவரின் மனைவியால் பேராதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 47 வயதான குறித்த நபர், கண்டி பிரதேசத்தின் அரசியல்வாதியான மஹிந்தானந்த அளுத்கமகேயின் தீவிர ஆதரவாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,காணாமல் போன நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு கொலை வழக்கு விசாரணைகள் அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே இவர் காணாமல் போயிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply