நாடாளுமன்றில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குழுக்கள்!

நாடாளுமன்றத்தில் இன்று பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் இதனை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (29) அறிவித்தார்.

நாடாளுமன்ற சபைக்குழு

நாடாமன்றத்தின் நிலையியற் கட்டளை 117 மற்றும் கடந்த 10ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் ஏற்பாடுகளின் பிரகாரம், சபாநாயகர் தலைமையிலான சபைக் குழுவிற்கு 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரேமலால் ஜயசேகர, வி ராதாகிருஷ்ணன், சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, ஜே சி அலவத்துவல, நிமல் லான்சா, பியல் நிஷாந்த டி சில்வா, ஜயந்த கெட்டகொட, சார்ள்ஸ் நிர்மலநாதன், ஜகத் குமார சுமித்ரராச்சி, கின்ஸ் நெல்சன், முதித பிரிஷாந்தி மற்றும் மர்ஜான் ஃபலீல் ஆகியோர் இந்தத் தெரிவுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற அலுவல்கள் குழு

அமைச்சர் மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, தலதா அத்துகோரள மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் கடமையாற்றுவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 118 இன் விதிகளின்படி, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் மீதான குழுவில் பணியாற்றுவதற்காக 16 பேர் தெரிவுக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, டலஸ் அழகப்பெரும, வாசுதேவ நாணயக்கார, கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அத்துகோரள, கனக ஹேரத், விஜித பேருகொட, தாரக பாலசூரிய, அனுராதா ஜயரத்ன, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஹேஷா வித்னாங்கே, கோகிலா குணவர்தன, வீரசுமன வீரசிங்க, சமன்பிரிய ஹேரத் ஆகியோர் இந்த குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொது மனுக்கள் மீதான குழு

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 122 இன் விதிகளின்படி 23 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பொது மனுக்கள் மீதான குழு நியமிக்கப்பட்டது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மார்கர், ஜகத் புஷ்பகுமார, பியங்கர ஜயரத்ன, திலீப் வெதஆராச்சி, வடிவேல் சுரேஷ், எஸ் வியாலாந்தரன, அசோக பிரியந்த, ஏ அரவிந்த குமார், கீதா சமன்மலே குமாரசிங்க, பி.வை.ஜி. ரத்னசேகர, சாரதி துஷ்மந்த, மொஹமட் முஸம்மில், துஷார இந்துனில் அமரசேன, வேலு குமார், வருண லியனகே, யூ.கே. சுமித் உடுகும்புர, மாயாதுன்ன சிந்தக அமல், நிபுண ரணவக்க, காமினி வலேபொட, ராஜிகா விக்ரமசிங்க, மற்றும் எம்.டபிள்யூ. டி சஹான் பிரதீப் விதான ஆகியோர் அடங்குகின்றனர்.

நிலையியற் கட்டளைக் குழு

சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோரின் தலைமையில் நிலையியற் கட்டளைகள் குழு, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 116 இன் விதிகளின்படி நியமிக்கப்பட்டது.

இதன்படி, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, பவித்ராதேவி வன்னியாராச்சி, சுரேன் ராகவன், மயந்த திஸாநாயக்க, சார்ள்ஸ் நிர்மலநாதன், கே.சுஜித் சஞ்சய பெரேரா, சாகர காரியவசம் மற்றும் யாதாமினி குணவர்தன ஆகியோர், நிலையியற் கட்டளைக் குழுவில் இடம்பெறுவதற்கு தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பின்வரிசைக் குழு

குறிப்பாக, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 126 மற்றும் கடந்த 10ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையின் விதிகளின் பிரகாரம், ஆளுந்தரப்பின் பிரதம அமைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் தலைமையிலான பின்வரிசை உறுப்பினர் குழுவிற்கு 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எஸ். வினோ நோகராதலிங்கம், செல்வராஜா கஜேந்திரன், வருண லியனகே, திஸ்ஸக்குட்டி ஆராச்சி, எம். உதயகுமார், சஞ்சீவ எதிரிமான்ன, கருணாதாச கொடித்துவக்கு, (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய, டபிள்யூ.எச்.எம். தர்மசேன, கின்ஸ் நெல்சன், ரோஹண பண்டார, குமாரசிறி ரத்னாயக்க ஆகியோர் இதில் அடங்குகின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply