யாழில் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் – சுற்றிவளைத்த இராணுவம்!

யாழ்.பருத்தித்துறை, கடற்பகுதி வழியாக படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த 18 பேர் இராணுவத்தினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறு, கைதானவர்களில் 16 பேர் வென்னப்புவ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் கிளிநொச்சியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது.

அத்துடன், அவர்களை வீட்டில் தங்க அனுமதித்திருந்த வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைதானவர்களை பருத்தித்துறை போலிசாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply