ரஞ்சன் விடுதலை–ஆவணங்களை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல வலியுறுத்தினார்.

இந்த நிலையில்,நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ,

ஆம், அந்த ஆவணத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.” – என்று குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply