
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான கலந்துரையாடலின்போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது.
இதில் இலங்கை தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி கலந்துரையாடலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான இலங்கை தூதுக்குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்கவுள்ளதோடு அன்றைய தினம் சபையில் அறிக்கை ஒன்றையும் முன்வைக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் இந்தத் தூதுக்குழுவில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்



