நாடு முழுவதும் வெடிக்கவுள்ள மீன்வர்களின் மாபெரும் போராட்டம்!

வடக்கு மீனவர்களின் எரிபொருள் பிரச்சினை மற்றும் இந்திய மீன்வர்களின் அதுத்துமீறல் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்காவிடின் பாரிய போராட்டம் வெடிக்கும் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே கடல் தொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதுவரை மீனவர்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை. 30 லீற்றர் எரிபொருள் தருவதாக கூறினார்கள். ஆனால் அது முழுமை அடையவில்லை. 30 லீற்றர் எரிபொருள் எமக்கு போதாது. 10 லீற்றர் எரிபொருள் கூட கிடைக்கவில்லை. இது அரசு செய்யும் கண் துடைப்பு வேலை. மக்கள் வீதியில் இறங்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் இந்த நடவடிக்கையை அரசு முன்னெடுக்கிறது.

மீனவர் ஒருவர் தொழிலுக்கு செல்ல வேண்டுமானால் 30 தொடக்கம் 80 லீற்றர் எரிபொருள் தேவை. மீனவர்கள் வீதிக்கு இறங்கினால் என்ன நடக்கும் என்று நன்றாகவே அரசுக்கு தெரியும். இது பட்டினிச் சாவுக்கு வழி தரும். இந்திய ரோலர்கள் இங்கே வருவதற்கு வழி விடுவது போல, எம்மை கடலுக்கு செல்ல விடாமல் தடுக்கும் நோக்கில் தான் எரிபொருள் தரவில்லை என்று எமக்கு தோன்றுகிறது.

அத்துடன் இந்திய ரோலர்கள் இங்கே வந்து மீன்களை மட்டும் இல்லை, பவளப் பாறைகளையும் அள்ளிக்கொண்டு சென்று தமது கடல் பரப்பில் வைக்கின்றனர். கச்சதீவு எப்போதுமே இலங்கைக்கு தான் சொந்தம்.

ஆனால் இந்திய மீனவ தலைவர்கள் கச்சதீவை எப்படியாவது வாங்கிவிட விட வேண்டும் என்று போராடுகிறார்கள். இதன் ஒருபடியாக கச்சதீவில் இந்திய இராணுவ தளம் அமைப்பதற்கான பேச்சுக்கள் நடைபெறுவதாக அறிகின்றோம். இதனை எமது நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

இல்லையேல் எமது உயிரைக்கூட மதிக்காமல் போராடுவோம். இலங்கை அரசின் நாடாளுமன்றம் நாடக மேடையாக உள்ளது. யாரோ சொல்லி கொடுப்பதை சொல்வது போன்று நாடளுமன்ற உறுப்பினர்களும் உரையாற்றி வருகின்றனர். இதன் முதல் நடிகராக ரணில் விக்கிரமசிங்க இடம்பிடித்துள்ளார்.

ஆருடம் கூற வேண்டாம். ஆகவே அவரை நாட்டை விட்டு அகற்ற வேண்டும். எம்மை வாழ விடுங்கள். உங்களுக்கு ஒரு வருடத்தில் அந்நிய செலாவணியை ஈட்டித்தருகின்றோம். நாட்டை சொர்க்க பூமியாக மாற்றுவோம். வடக்கு தெற்கு மீனவர்களை இணைத்து நாம் ஒரு அமைப்பொன்றை உருவாக்கவுள்ளோம். அதன் ஊடாக தேசிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

அரசியலை விட்டு அகற்ற வேண்டும். மக்களை அனுசரித்து செல்கின்ற ஆட்சியாளர் தான் மக்களுக்கு வேண்டும். எமது சொத்துக்களை அழித்துவிட்டு தமிழக முதல்வர் எமக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றார். இப்படி பல்வேறு நரி தந்திரங்களுக்குள் சிக்கி எமது மக்கள் எமது மீனவர்கள் வாழ்கின்றனர்.

இது தொடர்பில் அமைச்சர் அறிந்துகொள்ள வேண்டும். படகுக்கு ஓயில் கலந்து தான் எஞ்சின்கள் ஓடும். இதையும் கடல்தொழில் அமைச்சர் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே இது தொடர்பில் உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply