போசாக்கான உணவின்றி தும்பப்படும் மீனவ பெண்கள் குடும்பங்களின் பிள்ளைகள்! – வடமாகாண பெண்கள் சம்மேளனம்

தற்கால பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் மீனவ பெண்கள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுமே மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மீனவக் குடும்பங்களின் பிள்ளைகள் போசாக்கான உணவின்றி தும்பப்படுகின்றனர் என வடமாகாண பெண்கள் சம்மேளனம் (தேசிய மீனவ பெண்கள் சம்மேளத்துடன் இணைந்தது) கவலை தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் உரிய முறையில் எண்ணெய் வழங்கப்படாமையால் நாம் எமது மீன்பிடித் தொழிலை இழந்துள்ளதோடு, மீனவத்தை அண்டிய தொழில்களையும் முற்றாக இழந்துள்ளோம்.

இதனால் எமது குடும்பங்கள் தொடர்ச்சியாக வறுமையை சந்திப்பதோடு, எமது பிள்ளைகளுக்கு ஒழுங்கான உணவைக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம்.

எனவே வடமாகாண பெண்கள் சம்மேளனம் என்ற வகையில் அரசாங்கத்துக்கு பொது கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

அவையாவன,

  1. எரிபொருள் விலையை குறைத்து, தொடர்ச்சியாக எரிபொருளை வழங்கி மீனவர்களின் தொழிலை மீள ஆரம்பிக்க வழிவகுக்க வேண்டும்.
  2. மீனவத் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்களை அடையாளப்படுத்தி அவர்களுக்காக நிவாரணங்களை வழங்க வேண்டும்.
  3. தொழிலை இழந்திருக்கின்ற மீனவப் பெண்கள் வேறு தொழில்களில் ஈடுபடுத்துவதற்கான வழிவகைகளை பிரதேச செயலகத்தின் ஊடாக உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
  4. மிகவும் சிரமத்திற்கு மத்தியில் மீனவத்தை அண்டிய தொழில்களில் ஈடுபடும் தொழில்களை அபிவிருத்தி செய்வதற்கான மானியங்களை வழங்க வேண்டும்.
  5. மீனவக் குடும்பங்களின் பிள்ளைகள் போசாக்கான உணவின்றி தும்பப்படுகின்றனர். எனவே, இது தொடர்பான ஆய்வுகளை டேற்கொண்டு போசாக்கு உணவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  6. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்ப தலைமைத்துவப் பெண்களுக்கான விசேட அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொணள்ள வேண்டும். இது தொடர்பாக பலமுறை கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் நடைமுறையில் இல்லை.
  7. தமது கைகளைக் கொண்டு தொழில் ஈடுபடும் மீனவப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செல்வதோடு இவர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
  8. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் சகல குடும்பங்களையும் உடனடியாக மீள குடியமர்த்த வேண்டும். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
  9. கருவாடு, மாசி போன்ற அறுவடைக்கும் பின்னரான தொழில்களில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் தொழிலை மீள ஆரம்பிக்க முடியாமல் தடையாய் இருக்கின்ற பிரச்சினைனகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
  10. இந்திய இழுவைப் படகு தொழில் மற்றும் சட்டவிரோத தொழில்களை உடனடியாக நிறுத்தி எமது மீனவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதற்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். – என்றுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply