மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று செயலமர்வு இடம்பெற்றது!

பங்குபற்றுதலுடனும் ,பொறுப்பேற்றலுடனுமான உள்ளூர் ஆளுகையை மேம்படுத்தல் எனும் தொணிப் பொருளின் கீழ் கிராம மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தி தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலான “மக்கள் மன்றம்” இடம்பெற்றது.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஏசியன் பவுண்டேசன் அமைப்பின் நிதி அனுசரணையில் இச்செயலமர்மானது மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்கிழமை (30) இடம்பெற்றது.

இதில் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், மாதர் அமைப்பினர், இளைஞர்கள்,யுவதிகள், மூதூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் ,பிரதேச சபை உறுப்பினர்கள் எனபலரும் பங்குபற்றியிருந்தன.

இதன்போது கிராம மக்கள் எதிர் நோக்கும் காணிப்பிரச்சினை, போதைவஷ்து, சிறுவர் துஷ்பிரயோகம் சார்ந்த பிரச்சினைகள் ,வடிகாண் பிரச்சினை, எரிபொருள் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக சமூகமட்ட பிரதிநிதிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு பின்னர் அதற்கான ஆலோசனைகளும் , வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பார்த்தீபன் ,மூதூர் பிரதேச சபையின் செயலாளர் வீ.சத்தியசோதி, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், இளைஞர் அபிவிருத்தி அகத்தின் இணைப்பாளர் பொன்.சற்சிவானந்தம் ,மூதூர் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பீ.அறபாத் ,சம்பூர், மூதூர் பொலிஸ் நிலையப் பொறுதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply