முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்களின் சிறுவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடர்பான தெளிவூட்டும் செயலமர்வு தம்பலகாம உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் தலைமையில் பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் நேற்று (29) நடை பெற்றது.
அரச மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள 46 முன்பள்ளிகளில் இருந்து 1038 சிறுவர்கள் நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் பயன் பெறவுள்ளனர்.
குறிப்பாக,முன்பள்ளி சிறார்களின் போசாக்கினை அதிகரித்தல், பிள்ளைகளின் முன்பள்ளி வருகையினை அதிகரித்தல், வறிய குடும்பங்களுக்கு சிறிதளவு நிவாரணம் வழங்குதல், போசாக்குமிக்க இயற்கை உணவிற்கு பிள்ளைகளை பழக்கப்படுத்தல், நல்ல சுகாதார பழக்கவழக்கங்களை ஏற்படுத்தல், சகலருக்கும் சமமான உணவு, பிள்ளைகளின் ஒப்பீட்டை குறைத்தல் , நாட்டின் வனித வளத்தை மேம்படுத்துவது தொடர்பாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பு பற்றி மக்களுக்கு புரிய வைத்தல் போன்ற பல நோக்கங்களைக் கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த, நிகழ்வில் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எஸ் அன்வர்தீன் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் வாசனா குமாரி, சிரேஸ்ட முகாமைத்துவ அலுவலர் ஜே. நிஹாத் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


பிற செய்திகள்



