வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வைக் கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 30 ஆவது நாள் போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வதேச தினத்தையிட்டு அவர்களுக்கு நீதிகோரி இன்று மட்டக்களப்பு ஏறாவூர், தன்னாமுனை பிரதேசத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இiணைப்பாளர் கண்டுமணி லதன் தலைமையில்இது இடம்பெற்றது.

இவர் தலைமையில் இடம்பெற்றுவரும் ‘வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ 100 நாள் தொடர் போரட்டத்தின் 30 வது நாள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து ஏறாவூர் தன்னாமுனை பஸ்தரிப்பு நிலையத்துக்கு முன்னால் ஒன்றிணைந்த பொதுமக்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கோஷங்கள் எழுப்பியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது நன்பகல் 12 மணிக்கு ஆரம்பித்து சுமார் ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply