15 இலட்சம் ரூபாவுடன் கைது செய்யப்பட்ட ஐஸ் போதைப் பொருள் வியாபாரி!

மதுரங்குளி – சமீரகம பகுதியில் ஐஸ் ரக போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்

கொழும்பு போதை ஒழிப்பு ( நாகோட்டிவ்) பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 30 கிராம் ஐஸ் ரக போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 15 இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஐஸ் ரக போதைப் பொருள் மற்றும் பணம் என்பனவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மதுரங்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply