தொடருந்து தொழிற்சாலையை பாதுகாக்க நடவடிக்கை-பந்துல குணவர்தன!

இரத்மலானையில் அமைந்துள்ள தொடருந்து தொழிற்சாலையை திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில்,போக்குவரத்து மற்றும் வெகுசனத் தொடர்பாடல் அமைச்சர் பந்துல குணவர்த்தன இரத்மலானையில் அமைந்துள்ள தொடருந்து தொழிற்சாலைக்கு விஜயம் செய்த போது அதற்கான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

அதாவது, இலங்கையின் மிகப் பெரும் அரச தொழிற்சாலையான தொடருந்து தொழிற்சாலையில் இரயில்களின் திருத்தப் பணிகள், எஞ்சின் பராமரிப்புப் பணிகள், தொடருந்து பெட்டிகள் தயாரிப்பு, உதிரிப்பாகங்கள் தயாரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் உள்ளிட்ட ஏராளம் பணிகள் நடைபெறுகின்றன.

இந்தத் தொழிற்சாலை பெரும் நிலப்பரப்பில் அமைந்துள்ளதன் காரணமாக அங்குள்ள பாதுகாவலர்களால் மொத்த தொழிற்சாலைக்கும் உரிய முறையில் பாதுகாப்பு வழங்க முடியாதுள்ளது.

இதன் காரணமாக திருடர்கள் மற்றும் ​போதைக்கு அடிமையானோர் இந்தத் தொழிற்சாலையின் உதிரிப்பாகங்களை திருடிச் சென்று குறைந்த விலைக்கு விற்பனை செய்து அரசாங்கத்துக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்துகின்றனர்.

ஆகவே அவ்வாறான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு பொலிசாரின் ரோந்து மற்றும் காவல் பணிகளை அதிகரிக்கவும், விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன உத்தரவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply