பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த கார்: 8 பேர் பரிதாப மரணம்

ஸ்ரீநகர்,ஓக 30

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. இதில் கார் முழுமையாக சேதமடைந்தது.

பண்டா பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இவ்விபத்தில் காரில் இருந்த சிறுமி உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்குவதுடன் சிகிச்சைக்கான செலவையும் ஏற்றுக்கொள்வதாக மாவட்ட துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply