2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு ரூ.16.483 பில்லியன் தேவைப்படுவதாக அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேர்வுத் தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் உள்ளிட்டவற்றை அச்சிடுவதற்குத் தேவையான காகிதம் மற்றும் எழுதுபொருட்கள் இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் காகிதத் தேவைகளும் இந்திய கடன் திட்டத்தின் மூலம் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
இதற்கான விலைமனு கோரிக்கை ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மொத்த பாடப்புத்தகங்களில் 45% அரச அச்சுக் கூட்டுத்தாபனத்தின் மூலம் அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்த காகிதம் பல கட்டங்களில் இறக்குமதி செய்யப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்



