
அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று சமர்ப்பித்த வரவு செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதிபர் பழைய கதைகளை எல்லாம் சொன்னார். அன்றிலிருந்து பல்வேறு தலைவர்களால் இந்தக் கதைகள் கூறப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அத்துடன், சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், திருடும் அரசாங்கத்துடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது எப்பொழுதும் பயனற்றவையே எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இன்றைய பொருளதாரத்தை பற்றி இன்னும் பலருக்கும் தெரியவில்லை என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்



