பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் திறப்பு

கடும் மழை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நீர்த்தேக்கத்திற்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையை அண்மித்த பகுதியில் குறைந்த வளிமண்டல குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மிமீ அளவில் பலத்த மழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply