
இன்றைய நாடாளுமன்ற சபை அமர்வில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கருத்து தெரிவிக்கையில்:
முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் அனைவரும் அறிந்த விடயம்.நீதி மன்றம் அங்கு எந்த கட்டுமானங்களையும் அமைக்கக் கூடாது என அறிவித்துள்ளது.இந்த நிலையில் தேரர் ஒருவரின் தலைமையில்,இருவர் அங்கு கட்டுமானங்களை இரகசியமாக மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது.நீதிமன்றத்தை மக்கள் நம்புகின்றனர்.
ஆகவே அதன் கட்டளையை மீறி இவ்வாறு பல செயற்பாடுகள் அங்கே நடைபெறுகிறது. இதற்கான பொறுப்பு யார் கூறுவது.காலம் காலமாக அங்கே தமிழர்கள் வழிபட்டமைக்கான ஆதாரங்கள் அங்கே கிடைத்தும் கூட இவ்வாறான திணிப்புச் செயற்பாடுகள் நடைபெறுகிறது என்றார்.
பிற செய்திகள்



