இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: சவூதி அரேபியாவிற்கு அழைப்பு!

இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுமாறு சவூதி அரேபியாவிற்கு இலங்கை நேற்று (30) அழைப்பு விடுத்துள்ளதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவூதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சுற்றுசூழல் அமைச்சர் நசீர் அஹமட் இந்த அழைப்பை விடுத்துள்ளதாக கூறுகிறார்.

சவூதி அரேபியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை இந்த அழைப்பை விடுத்துள்ளதாக சவூதி ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் சுரங்கத் தொழிலுக்கு சவூதி முதலீட்டாளர்களை வரவழைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் சவூதி ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பிரதிநிதியாக சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் உத்தியோகபூர்வ விஜயமாக 28ஆம் திகதி ரியாத்துக்கு வருகை தந்ததுடன், உத்தியோகபூர்வ விஜயத்தின் போது சவூதி அரேபிய பிரதி வெளிவிவகார அமைச்சர் வலீத் அல் குரேஜி மற்றும் அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஷாத். பல அதிகாரிகளுடன் இணைந்து கலந்துரையாடல் இடம்பெற்றதாக சவூதி ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply