களுகங்கைப் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை!

நாளை (01) பிற்பகல் 03.00 மணி வரை செல்லுபடியாகும் என நீர்ப்பாசனத் திணைக்களம் களுகங்கைப் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் பாலமடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் அலபாத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ்வான பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அப்பிரதேசங்களில் உள்ள மக்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் மேலும் கோருகிறது.

பிற செய்திகள்

Leave a Reply