பழைய எலுவாங்குளம் சப்பாத்துப் பாலத்தை சீரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

புத்தளத்திலிருந்து எலுவாங்குளத்தினூடாக மன்னார் செல்லும் பாதை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் மூடப்பட்டுள்ள நிலைமையில் காணப்படுகின்றது.

கலா ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறப்பதினால் குறித்த பகுதியிலிருந்து நீர் பெருக்கெடுத்து பழைய எலுவாங்குளம் சப்பாத்து பாலத்திற்கு மேலாகவே அடித்துச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

இவ்வாறு வெள்ள நீர் வேகமாக செல்வதனால் நீரின் அழுத்தம் காரணத்தினால் குறித்த பாலத்தின் கொங்க்ரீட் உடைந்த நிலையில் தாழிரங்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் புத்தளத்திலிருந்து அப்பாலத்தினூடாக மன்னார் செல்லும் பொதுமக்கள் மற்றும் வில்பத்து சரணாலயத்தைப் பார்வையிட வரும் சுற்றுளாப் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியதாக வில்பத்து சபாரி சங்கத்தினர் இதன்போது தெரிவித்தனர்.

சுற்றுளாப் பயணிகள் சிரமத்துக்குள்ளாவதை தவிர்பதற்காக வில்பத்து சபாரி சங்கத்தினரால் பல இலட்சம் ரூபா செலவில் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்காக படகுகள் மூலமான தற்காலிக பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டது.

சுற்றுளாப் பயணிகள் செல்வதற்காக
தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட பாலத்தினால் எதுவித பிரயோசனமும் இல்லையெனவும் வாகங்கள் செல்வதற்காக நிரந்தர பாலமொன்றை நிர்மாணித்துத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply