அரச நிறுவனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்- சம்பிக்க ஆலோசனை!

நாட்டில் ஒரு பணிக்கு ஒரே ஒரு நிறுவனமே போதுமானது என சமகி ஜன பலவேக கட்சியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இன்று (31) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தென்னை கைத்தொழில் அபிவிருத்திக்காக மாத்திரம் நாட்டில் மூன்று நிறுவனங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அனைத்தையும் தனியார் மயமாக்குவதன் மூலம் இலாபம் ஈட்ட முடியும் என தாம் நம்பவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இந்த நாட்டில் அரச நிறுவனங்களை நிர்வகிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சுமார் ஆயிரம் அரச நிறுவனங்கள் உள்ளதாகவும் “ஒரு பணிக்கு ஒரு நிறுவனமாக நிறுவனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். தென்னை வளர்ச்சிக்கு மூன்று நிறுவனங்கள் உள்ளன. நாட்டில் இதுபோன்ற பல நிறுவனங்கள் உள்ளன. முறையான மேலாண்மை தணிக்கை செய்தால், இந்த நிறுவனங்களை ஒன்றாக குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply