மயிலிட்டி- பருத்தித்துறை வீதி இன்றிலிருந்து 24 மணித்தியாலமும் திறப்பு!

யாழ். மயிலிட்டி பருத்தித்துறை வீதி இன்று வியாழக்கிழமை 24 மணித் தியாளமும் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட உள்ளது என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக மூடப்பட்ட பருத்தித் துறை மயிலிட்டி  வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக இரவு 10 மணிக்கு மூடப்பட்டு அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பாதுகாப்பு கட்டளை தளபதி  மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் குறித்த வீதியை 24 மணித்தியாலமும் திறந்து விடுவதற்கு இணக்கம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply