திருகோணமலை, மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் உள்ள அல்லை விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட கிரான்வெளி, வட்டவன் போன்ற வெளிகளில் இம்முறை சுமார் 125 ஏக்கர் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்படாது கைவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதாவது,உரிய நேரத்திற்கு பசளை வழங்கப்படாமையால் இம்முறை தாம் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளாது கைவிட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தாம், குத்தகைக்கு எடுத்தே வேளாண்மைச் செய்கை மேற்கொள்வதாகவும், எனினும் இம்முறை பசளைப் பிரச்சினையால் வேளாண்மை செய்யாவிட்டாலும் வயல் சொந்தக்காரர்களுக்கு குத்தகை கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் கவலை வெளியிட்டனர்.
இது விடயத்தில் புதிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கான பசளையை உரிய நேரத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தோப்பூர் பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பிற செய்திகள்



