ரணிலுக்கு உரை எழுதிக் கொடுக்கும் மஹிந்த – சபையில் சஜித் கிண்டல்!

இன்றைய நாடாளுமன்ற சபை அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில்:

நேற்று முன்தினம் ஜனாதிபதி ரணில் இடைக்கால வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றுக்கு சமர்ப்பித்தார்.அதை அவர் தயாரிக்கவில்லை.

மொட்டுக் கட்சி எழுதிக்கொடுத்து ரணில் அதை இங்கே வந்து வாசித்துக் காட்டினார்.

அதிலே ஒன்றுமே இல்லை.சிறிய பிரச்சினைக்கு கூட தீர்வில்லை.மக்கள் அழுகின்றனர்.ஆனால் அரசு கூடி கும்மாளமிடுகின்றது.இப்போது ஜனாதிபதியாக உள்ள ரணில் ராஜபக்சாக்களை காப்பாற்ற வந்தவர்.

அவர் இப்போது சட்டிக்குள் அகப்பட்ட நண்டுபோல உள்ளார்.எப்போது அவருக்கு நெருப்பு வைக்கப்படும் என்று தெரியாது.நண்டு வெளியே ஓடிவிடும் என்றார்.

பிற செய்திகள்

Leave a Reply