வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!(படங்கள் இணைப்பு)

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாருடைய 42வது வருட நினைவு தினம்  வவுனியாவில் நகர மத்தியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் அனுஸ்டிக்கப்பட்டது.

குறித்த நினைவுதினமானது இன்று (01.09) காலை 8.30 மணியளவில் நகரசபையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.

இதன்போது தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தமிழ் அருவி சிவகுமாரனால் சிறப்புரையும் மேற்கொள்ளப்பட்டது. 

நகரசபை உபதலைவர் ஆ.குமாரசாமி, நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம், சுமந்திரன், மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் கெனடி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

rbt
rbt
rbt
rbt
rbt
rbt

பிற செய்திகள்

Leave a Reply