இலங்கைக்கு கடன் வழங்க IMF இன் நிர்வாகக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்! – தூதுக்குழுவின் தலைவர் விளக்கம்

இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் விசேட செய்தியாளர் மாநாடு தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர்,

“இலங்கை அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் 2.9 பில்லியன் விரிவான நிதி வசதிக்காக உடன்பாடு எட்டப்பட்டது.

இது 48 மாத திட்டமாகும். இதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அதிகாரிகள் ஏற்கனவே பொருளாதார சீர்திருத்தங்களை தொடங்கியுள்ளனர். இது தொடர்ந்து நடக்க வேண்டும்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் நிலையானது அல்ல. அதை மறுசீரமைக்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply