
அரசாங்க தரப்பிற்குள் இன்னமும் ஊழல் தலைதூக்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டர் டெண்டர் நடைமுறைகளை மீறி வழங்கப்பட்டதாகவும் சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் தரம் குறைவாக இருப்பதாகவும், அதில் ஊழல் நடந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சங்கிலி பறிப்பு மற்றும் பிக்பாக்கெட் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பீல்ட் மார்ஷல் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
போராட்டக்காரர்களைக் கையாளும் சூழலில் ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறை உறுப்பினர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“என்னுடைய செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் இருக்கிறார். சிறிய காரில் பயணம் செய்த அவர், இப்போது ஸ்கூட்டரில் வேலைக்கு வருகிறார். ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியர்களும் இந்த விகிதத்தில் விரைவில் ஸ்கூட்டரில் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பிற செய்திகள்



