நாட்டின் வங்குரோத்து நிலை:உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்-வஜிர வேண்டுகோள்!

நாட்டின் வங்குரோத்து நிலை தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோருவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களினதும் கடமை என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் வஜிர அபிவர்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்

பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளால் அல்ல, பாராளுமன்றத்திற்கு தெரியாமல் வேறு ஒரு குழுவினரால் நாட்டை வங்குரோத்து செய்ததாகவும், ஆனால் பாராளுமன்றத்தின் மீது பழி சுமத்தப்பட்டுள்ளதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

நாட்டை திவாலாக்கும் அதிகாரம் நிதி அமைச்சுக்கோ அல்லது மத்திய வங்கிக்கோ கிடையாது எனவும், அதிகாரம் இல்லாத ஒன்றைச் செய்யும் போது அனைவரும் மௌனம் காப்பதாகவும், நாடாளுமன்ற பிரதிநிதிகள் தண்டிக்கப்படுவதாகவும் அபேவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் பிரகாரம் வெளிநாட்டுக் கடனை செலுத்துவதில்லை என தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்க அதிகாரம் இல்லை. நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய போது 225 பேரும் வெட்கப்பட வேண்டும் என்றார்.

நாட்டின் நிலைமையை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தால், பாராளுமன்றம் கூடி நாட்டை வங்குரோத்து செய்யாமல் சமாளிப்பதற்கான செயலணியை மேற்கொண்டிருக்கும்.

பாராளுமன்றம் நிதிக் கட்டுப்பாட்டை கைவிட்டு மற்றவர்களிடம் ஒப்படைத்துள்ளது, ஆனால் சட்டப்படி நிதிக் கட்டுப்பாடு பாராளுமன்றத்திற்கே சொந்தம்.

இலங்கையில் அதிகாரமற்ற செயற்பாடு இடம்பெற்றுள்ளதாகவும், ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அது தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதாகவும் வஜிர அபிவர்தன தெரிவித்தார்.

நாட்டை திவாலாக்குவதற்கு பாராளுமன்றத்தின் 225 பொறுப்பு அவசியமில்லை எனவும், இந்த செயற்பாட்டை பாராளுமன்றம் அங்கீகரிக்காவிட்டால் நாட்டை வங்குரோத்து என அறிவித்தவர்கள் சட்டவிரோதமான வேலைகளை செய்துள்ளதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply