ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் பெறும் நாடாக இந்தியா பதிவு

ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் பெறும் நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது.

உக்ரைன் மீதான போருக்குப் பின்னர் வர்த்தக உறவுகள் மாறிய போதும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யை அதிகளவில் பெற்று வருகிறது.

ஆறு எண்ணெய் கப்பல்கள் நிறைந்த கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இதுவே இந்தியாவின் அதிகபட்சமான கச்சா எண்ணெய் வர்த்தகம் என்றும் கூறப்படுகிறது.

மாதந்தோறும் 5 ல் ஒரு பங்கு கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு செல்வதாக ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு நீண்ட காலமாக இந்த சரக்குக் கப்பல்கள் செல்லும் என்றும் கவர்ச்சிகரமான விலை நீடிக்கும் வரை இந்தியாவுடனான வர்த்தகம் நீடிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply