சீனா – இந்தியா மோதல்: கருத்துத் தெரிவிக்க ரணில் மறுப்பு!

இலங்கை விவகராத்தால் சீனா மற்றும் இந்தியத் தூதரகங்கள் இடையேயான இராஜதந்திர மோதல் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.

‘இரு நாட்டு தூதரகங்களுக்கு இடையிலான கருத்து மோதல். இது தொடர்பில் பதிலளிக்க நான் விரும்பவில்லை’ என்று ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுக்கின்றது என்று சீனத் தூதுவர் குற்றம் சுமத்தியிருந்தார். இதற்கு , சீனத் தூதுவர் இராஜதந்திர நெறிமுறைகளை மீறுவதாகவும், சீனா இலங்கையை கடன்பொறிக்குள் சிக்க வைத்துள்ளதாகவும் இந்தியா கடும் பதிலடி கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

இன்றைய பாராளுமன்ற அமர்வு! (தமிழில் நேரலை)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இன்று 71வது அகவை!

நாட்டில் மழை நிலைமை தொடரும்

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உடன்படிக்கை-அமெரிக்க தூதர் மகிழ்ச்சி!

நான் பிறந்த போது கடனற்ற தேசமாக இலங்கை இருந்தது- ரணில் பெருமிதம்!

Leave a Reply