தமிழ் – சிங்கள மக்களுக்கிடையிலான இடைவெளியை நிரப்ப முடியும் -விஜேசிங்ஹ நம்பிக்கை!

தமிழ் – சிங்கள மக்களுக்கு இடையிலுள்ள இடைவெளியை நிரப்ப முடியுமென்ற நம்பிக்கை தனக்குள்ளதாக , இலங்கையின் புகழ்பூத்த இலக்கியவாதி கலாநிதி ரத்ன ஸ்ரீ விஜேசிங்ஹ தெரிவித்தார் .

இனங்களுக்கிடையிலான நல்லுறவை அடிப்படையாகக் கொண்டு சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற வட காற்று எனும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே , அவர் இதனைத் தெரிவித்தார் .

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது ,

நான் தமிழ் மக்களின் அன்புணர்வு , மற்றும் தமிழ் மக்கள் அனுபவித்த வேதனைகள் தொடர்பில் பல பக்கங்களை எழுதிய போதிலும் , அவை சிங்கள மொழியில் அமைந்தமையினால் உங்களுக்கு அதனைத் தெரிந் திருக்க வாய்ப்பில்லை . தமிழ் இலக்கியங்களான இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம் , மணிமேகலை ஆகிய இலக்கியங்கள் சிங்கள இலக்கியங்களிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன .

அதேவேளை , சுப் பிரமணிய பாரதியார் கவிதைகள் , மற்றும் ச ங்ககாலக் கவிதைகள் ஆகியவற்றை நாங்கள் சிங்கள மொழியில் கற் றுள்ளோம் . அவற்றுக்கும் மேலாக புதுவை இரத் தினதுரையின் கவிதைகள் , மற்றும் ஜெயபாலன் கவிதைகளை சிங்கள மொழிகளில் நாம் இரசிக்கின்றோம் . இவ்வாறு தமிழ் இலக்கியங்கள் , நூல் கள் , மற்றும் கவிதைகளை நாம் சிங்கள மொழியில் கற்றாலும் எமக்குள் பாரிய இடைவெளி உள்ளதென்றே கூற முடியும் .

அந்த இடைவெளியை ஓரளவிற்கேனும் நிரப்ப முடியுமென்ற நம்பிக்கை எனக்குள்ளது . அந்த நம்பிக்கையுடன் தான் நீண்ட காலத்திற்குப் பின்னர் வடக்கிற்கு வந்தேன் . உங்கள் மொழி எனக்குத் தெரியாது . எனது மொழி உங்களுக்குத் தெரியாது .

அதனை நினைத்து மிகவும் கவலைப்படுகின்றேன் . 1974 ஆம் ஆண்டு நான் உயர்தரம் கற்கும் போது , மன்னார் மாவட்டத்தில் தமிழ் – சிங்கள – முஸ்லிம் மக் கள் ஒற்றுமையாக இருப்பதாக எனது தமிழ் நண்பன் அடிக்கடி கூறுவார் . தமிழ் மக்கள் மிகவும் எளிமையானவர் கள் என்பதுடன் , சிறந்த பண்பாட்டை உடையவர்கள் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன் . தமிழ் – சிங்கள உற வினை மையமாக வைத்து நான் பல பாடல்களையும் இயற்றியுள்ளேன் எனவும் அவர் மேலும் கூறினார் .

பிற செய்திகள்

Leave a Reply