ரணிலின் அரசாங்கம் மக்களின் ஆணைக்கு எதிரானது- சபையில் அனுர ஆவேசம்!

அரசாங்கம், தனியார் துறையினர், விவசாயிகள், வெளிநாடுகளில் உள்ளவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் இரண்டு மூன்று வருடங்களில் இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.

இவ்வாறு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமாயின் மக்களின் ஆணையுடன் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு நிறைவேற்றினால் மக்கள் அரசாங்கத்திற்கு ஓரிரு வருடங்களை வழங்குவார்கள்.

தற்போதைய ஜனாதிபதியை மக்களால் தெரிவு செய்யவில்லை எனவும், ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஆணை பெற்று ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் அமைப்பது ஆணைக்கு எதிரானது.

இடைக்கால வரவு செலவுத் திட்டமும் ஆணைக்கு எதிரான வரவு செலவுத் திட்டம் எனவும், நெருக்கடியில் இருந்து மீள ஆணை தேவை எனவும், தற்போது ஆணை இல்லாத சில மிதக்கும் மனித தூண்கள் வந்து நாட்டை ஆள்வதாகவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply