மறைந்த இளம் சுயாதீன ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் தினம் யாழில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
அந்தவகையில் இன்று யாழ் ஊடக மையத்தில் மு.ப 11 மணியளவில் ஞானப்பிரகாசம் பிரகாஸின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து ,தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
மேலும் இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.










