நாடாளுமன்றத்தில் பௌத்த தேரர் ஒருவரின் விசித்திர செயல்!

நாடாளுமன்றத்தில் செங்கோலை எடுத்து வரும்போது எழுந்து நிற்காத பௌத்த தேரர் ஒருவர், சீனாவின் உளவு கப்பல் வரும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்தியதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இதனை சுட்டிக்காட்டினார்.

இலங்கை நெருக்கடியான நிலையில் இருக்கும்போது இந்தியா, உணவுக்கப்பல்களை அனுப்பி இலங்கை மக்களுக்கு உதவி வருவதுடன் , தமிழ் நாடும் இரண்டு உணவுக் கப்பல்களை அனுப்பியிருந்ததாகவும் அவர் கூறினார்.

எனினும் சீனா இந்த நெருக்கடியான நிலையில் உளவுக்கப்பலை அனுப்பியதாகவும் கோவிந்தன் கருணாகரம் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply