சர்வதேச தென்னை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு!

சர்வதேச தென்னை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இன்று திருகோணமலை இலுப்பைக்குளம் பிரதேசத்தில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான B. H. N. ஜயவிக்ரம கலந்து கொண்டதுடன் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்குத் தென்னங்கன்றுகளையும் வழங்கி வைத்தார்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள தென்னங்கன்றுகளை தங்களுடைய குடியிருப்புப் பிரதேசத்திலோ அல்லது தோட்டத்திலோ சரியான முறையில் பராமரித்து வளர்ப்பதன் மூலம் தங்களுக்குத் தேவையான தேங்காய்களை பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுவதுடன் அவற்றை கடைகளிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

எனவே வழங்கப்படுகின்ற தென்னங்கன்றுகளை வெறுமனே வீட்டினுடைய ஒதுக்குப்புறங்களில் வைத்திருப்பதை விடுத்து உடனடியாக அவற்றை நட்டி முறையான அடிப்படையில் வளர்க்க வேண்டிய தேவை முக்கியமானதாக அமைவதாகவும் இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

அவர், தொடர்ந்தும் உரையாற்றுகையில், திருகோணமலை மாவட்டத்திலிருக்கக் கூடிய ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தென்னங்கன்றுகளை நடக்கூடிய இடம் காணப்படுகின்றப்பொழுது குறைந்தபட்சம் ஐந்து தென்னங்கன்றுகளை வளர்ப்பதன் மூலம் தங்களுடைய சுய நுகர்வுக்குத் தேவையான தேங்காய்களை அவற்றிலிருந்து நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்குள் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

அத்துடன், தங்களுக்கு இதன்மூலம் மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும்.
இதன்மூலம் இம் மாவட்டம் தேங்காய் உற்பத்தியில் தன்னிறைவு பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என்று இதன் போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

தென்னைப் பயிர்ச் செய்கையினுடைய அதிகாரிகளினால் நாற்றுமேடை தயாரிப்பது மற்றும் தென்னங்கன்றினுடைய பராமரிப்பு முறை தொடர்பான விளக்கங்களும் இதன்போது எடுத்துரை க்கப்பட்டன.

International green forest அமைப்பு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையினுடைய தவிசாளர் அரசியல் பிரமுகர்கள், அரச நிறுவனங்களின் அதிகாரிகளுட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

பிற செய்திகள்

Leave a Reply