டொலர் மோசடி செய்பவர்களை கைது செய்வதற்கு நாட்டில் சட்டம் இல்லை என இரத்தினபுரி மாவட்ட சபை உறுப்பினர் காமினி வலேபொட இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மோசடியான டொலர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அந்நிய செலாவணி சட்டத்தில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே திரு வலேபொட இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் டொலர்களுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் தேவையான விதிமுறைகளை உருவாக்கி டொலர்களை கொண்டு வருவது சிரமமான விடயமல்ல எனவும் திரு.காமினி வலேபொட மேலும் தெரிவித்தார்.
பிற செய்திகள்



