புளியங்குளத்தில் 1.5 மில்லியன் ரூபா செலவில் மைதானம் திறந்து வைப்பு!(படங்கள் இணைப்பு)

வவுனியா புளியங்குளம் முத்துமாரி நகர் கிராமத்தில் 1.5 மில்லியன் ரூபா செலவில் வாணி விளையாட்டு கழகத்திற்கான மைதானம் பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனால் இன்று (03) திறந்து வைக்கப்பட்டது.

அதாவது, இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி, கழக உறுப்பினர்கள், கிராமமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கிராமப்புற நகரங்களை தேசிய ரீதியில் உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

rbt
rbt

பிற செய்திகள்

Leave a Reply